தமிழ்நாடு

ரூ.2000 நோட்டுகளை வாங்கக் கூடாது! நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல்!!

26th Sep 2023 10:06 PM

ADVERTISEMENT

 

அரசுப் பேருந்துகளில் பயணிகளிடமிருந்து ரூ.2000 நோட்டுகளைப் பெறக்கூடாது என நடத்துநர்களுக்கு அரசுப் போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது. 

ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், வரும் 28ஆம் தேதிமுதல் அரசுப் பேருந்துகளில் இந்த அறிவுறுத்தல் பின்பற்றப்படவுள்ளது. 

கிளை மேலாளர்கள், நடத்துநர்களுக்கு தமிழக அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது. 

ADVERTISEMENT

பயணிகளிடமிருந்து ரூ.2000 நோட்டுகளைப் பெற்றால், அதற்கு நடத்துநர்களே பொறுப்பு என்றும் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.  

ADVERTISEMENT
ADVERTISEMENT