தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

25th Sep 2023 08:14 AM

ADVERTISEMENT

 

மேட்டூர்: காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து  வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,181கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை காலை 37.57அடியிலிருந்து 37.85 அடியாக உயர்ந்துள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,639 கன அடியிலிருந்து வினாடிக்கு 8181 கன அடியாக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இதையும் படிக்க | பாஜகவுடன் கூட்டணி?: அதிமுக இன்று ஆலோசனை

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 11 டிஎம்சியாக உள்ளது.

அனைத்து வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவிலிருந்து மீண்டு மெல்ல உயரத் தொடங்கியுள்ளது.

மழை அளவு 24.20 மி.மீட்டராக பதிவாகியுள்ளது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT