தமிழ்நாடு

மக்களவைத் தேர்தல்: தொகுதி பங்கீட்டை தொடங்கியது திமுக

25th Sep 2023 01:46 PM

ADVERTISEMENT

மக்களவைத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை திமுக தொடங்கியுள்ளது.

அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளது. காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி என நாட்டின் முக்கிய கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.

தமிழகத்தில் திமுக தலைமையிலேயே இந்தியா கூட்டணி களமிறங்கவுள்ளது. காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் கூட்டணியில் உள்ளன.

இந்த நிலையில், மக்களவை தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்யும் பணியை திமுக தலைமை தற்போதே தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT

முதல்கட்டமாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலைவர்களுடன் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதையும் படிக்க | சிங்கப்பூரில் கண்டெடுக்கப்பட்ட 2-ம் உலகப் போர் குண்டு!

கடந்த 2019 மக்களவை தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் வேட்பாளர் நவாஸ் கனி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT