தமிழ்நாடு

உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதை: கமல்ஹாசன் வரவேற்பு

25th Sep 2023 02:20 PM

ADVERTISEMENT

உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்கிற முதல்வரின் அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரவேற்றுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், பிரியத்திற்குரிய குடும்ப உறுப்பினர் மூளைச்சாவு அடைந்த துயர நிலையிலும், அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்து பிற உயிர்களைக் காக்க முன்வருவது மகத்தான தியாகம்.

இந்தத் தியாகத்தைப் போற்றிடும் வகையில் உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் எனும் தமிழ்நாடு முதல்வரின் அறிவிப்பை வரவேற்கிறேன், பாராட்டுகிறேன்.

இந்த அறிவிப்பு உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT