சுங்கச்சாவடியில் அரசு பேருந்துகளுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் நடைமுறையில் விளக்கம் அளிக்க முடியாது என நெடுஞ்சாலை ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
சுங்கக்கட்டணம் வசூலிக்க தடைகோரி தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
படிக்க | அதிமுக - பாஜக கூட்டணி முறிவால் திமுக அணிக்குப் பாதிப்பு?
சுங்கக்கட்டணம் வசூலிக்கத் தடைகோரி அரசு போக்குவரத்து கழகங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு இன்று (செப். 25) நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சுங்கச்சாவடியில் அரசு பேருந்துகளுக்கு சுங்கக் கட்டனம் வசூலிக்கும் நடைமுறையில் விளக்கம் அளிக்க முடியாது என நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களுக்குப் பிறகு இந்த வழக்கு அக்டோபர் 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
படிக்க | அதிமுக - பாஜக கூட்டணி முறிந்தது ஏன்?