தமிழ்நாடு

கொசஸ்தலையாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

25th Sep 2023 10:23 AM

ADVERTISEMENT

 

கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பில், சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான சத்தியமூர்த்தி சாகர் நீர்தேக்கம், பூண்டி 34,56 சதுர கி.மீ பரப்பளவில் திருவள்ளூர் வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நீர்த்தேக்கத்தின் நீர் மட்ட மொத்த உயரம் 35 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3231 மில்லியன் கன அடியாகும். தற்போது நீர் இருப்பு 33.90 அடியாகவும் கொள்ளவு 2792 மில்லியன் கன அடியாக உள்ளது. 

இந்த நிலையில், சத்தியமூர்த்தி சாகர் நீர்தேக்கம், பூண்டியில் நீர் வரத்து திங்கள்கிழமை காலை நிலவரப்படி 1520 கன அடியாக உள்ளது. 

ADVERTISEMENT

தற்போது அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

இதையும் படிக்க | முதல் நாளில் இந்தியாவுக்கு 5 பதக்கங்கள்

அணைக்கு வரும் நீர் வரத்து 34 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால் அணையின் வெள்ளநீர் வழிகாட்டுதலின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்கத்திற்கும் உபரிநீரை அணையின் பாதுகாப்பு கருதி நீர்த்தேக்கத்தில் இருந்து திங்கள்கிழமை(செப்.25) பிற்பகல் 4 மணியளவில் வினாடிக்கு 1000 கன அடி உபரி நீர் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நீர்த்தேக்கத்திற்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகபடியாகும் நிலையில், கூடுதல் உபரி நீர் படிப்படியாக திறக்கப்படும் என முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, நீர்த்தேக்கத்தில் இருந்து மிகை நீர் வெளியேறும் கொசஸ்தலையாறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்பூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பண்டிக்காவனூர், ஜெகநாதபுரம், புதுகுப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம், மடியூர், சீமாவரம், வெள்ளிவாயல்சாவடி, நாப்பாளையம், இடையான்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணூர் மற்றும் கொசஸ்தலையாற்றின் கரையின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT