தமிழ்நாடு

பாஜக தலைமை முடிவு செய்யும்: அண்ணாமலை!

25th Sep 2023 06:29 PM

ADVERTISEMENT

 

அதிமுக கூட்டணி முறிவு குறித்து பாஜக தேசிய தலைமை பதிலளிக்கும் என
மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,  என் மண் என் மக்கள் யாத்திரை கோவையில் நடைபெற்று வருகிறது. யாத்திரையில் அரசியல் பேசுவதில்லை.

படிக்கஅதிமுக - பாஜக கூட்டணி முறிவால் திமுக அணிக்குப் பாதிப்பு?

ADVERTISEMENT

கூட்டணி முறிவு குறித்த அதிமுக அறிக்கையை படித்தோம். கூட்டணி முறிவு குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும். இது குறித்து நான் பிறகு செய்தியாளர்களிடம் பேசுகிறேன். பாஜக தேசிய கட்சி. கூட்டணி குறித்து தலைமைதான் முடிவு செய்யும் எனக் குறிப்பிட்டார். 

பாஜக-அதிமுக கூட்டணி தொடா்பாக இரு கட்சித் தலைவா்களும் மாறுபட்ட கருத்து தெரிவித்து வரும் நிலையில், அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், பாஜகவுடனான கூட்டணி நிலைப்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாஜக - அதிமுக கூட்டணி முறிந்ததாக அறிவிக்கப்பட்டது.

படிக்க | அதிமுக - பாஜக கூட்டணி முறிந்தது ஏன்?

இது குறித்து அறிவித்த கே.பி. முனுசாமி, அண்ணாமலையின் பேச்சு அதிமுக தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது. எனவே, இன்று முதல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகுகிறது என்றார்.

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. கூட்டணி இல்லை.. கூட்டணி இல்லை என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT