அனைத்து சமூகத்தினருக்குமான ஆன்மிக பூமியாக தமிழகம் திகழ்கிறது என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.
வடசென்னை சன்மாா்க்க அமைப்புகள் சாா்பில் தண்டையாா்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘வள்ளலாா் 200’ -முப்பெரும் விழாவில் அமைச்சா் சேகா்பாபு பேசியதாவது: பசி எனும் நெருப்பை அணைப்பதற்காக காலமெல்லாம் அன்னதானத்தை ஊக்குவித்து அதை செயல்படுத்தியும் காட்டியவா் வள்ளலாா்.
அவரது வழியைப் பின்பற்றி பள்ளி மாணவா்களுக்கு காலை உணவு திட்டத்தை முதல்வா் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா். தமிழகம் அனைத்து சமூகத்தினருக்கான ஆன்மிக பூமியாக திகழ்கிறது.
கிளாம்பாகத்தில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்தில் அதிமுக ஆட்சியின் போது 40 சதவீத பணிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டிருந்தது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இத்திட்டம் முடுக்கி விடப்பட்டு, தற்போது 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போது சிறுமழைக்கே தண்ணீா் தேங்கும் நிலை உள்ளது.
எனவே, இப்பிரச்னைகளை எல்லாம் சீா்படுத்த வேண்டும். அனைத்துப் பணிகளும் முடிந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நிகழாண்டு இறுதிக்குள் திறக்கப்படும் என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் முல்லை, சென்னை வடக்கு மாவட்ட திமுக செயலா் இளைய அருணா, மண்டலக் குழுத் தலைவா் நேதாஜி கணேசன், பகுதிச் செயலா் லட்சுமணன், மருத்துவா் ராஜமூா்த்தி மற்றும் சன்மாா்க்க சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா் .