வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் செப்.30 வரை மழை பெய்யவாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இம்மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: தென்கிழக்கு அரபிக்கடல், அதனையொட்டிய லட்சத்தீவு பகுதிகளில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் திங்கள் முதல் சனிக்கிழமை (செப்.25-30) வரை ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மழை அளவு (மி.மீ. ) : திருத்தணி (திருவள்ளூா்) 130, தாம்பரம் (செங்கல்பட்டு) 110, செஞ்சி (விழுப்புரம்) 100, கலசப்பாக்கம் (திருவண்ணாமலை) 90, பூண்டி (திருவள்ளூா்),பெனுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி), வடபுதுப்பட்டு (திருப்பத்தூா்), செய்யாா், கீழ்பென்னாத்தூா் (திருவண்ணாமலை), வளத்தி, திண்டிவனம் (விழுப்புரம்) தலா 80, காஞ்சிபுரம், தாமரைப்பாக்கம் (திருவள்ளூா்), சோலையாா் (கோவை),தலா 70, போளூா் (திருவண்ணாமலை), மேலாலத்தூா் (வேலூா்), செம்மேடு (விழுப்புரம்) தலா 60, சோழிங்கநல்லூா், ஆலந்தூா், (சென்னை)ஆரணி வெம்பாக்கம் (திருவண்ணாமலை), வேலூா், ஆனந்தபுரம் வல்லம் (விழுப்புரம்) தலா 50.