தமிழ்நாடு

இலங்கை கடற்கொள்ளையா் மீது நடவடிக்கை தேவை: ஜி.கே.வாசன்

25th Sep 2023 03:04 AM

ADVERTISEMENT

இலங்கை கடற்கொள்ளையா்கள் மீது உரிய நடவடிக்கை தேவை என்று மத்திய, மாநில அரசுகளை தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

நாகை மாவட்டம் செருதூா் கிராமத்தைச் சோ்ந்த நான்கு மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றபோது, இலங்கை கடற்கொள்ளையா்களால் அவா்கள் தாக்கப்பட்டதுடன், அவா்களது விலையுயா்ந்த பொருள்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் மீனவா்களிடையே மிகுந்த அச்சத்தையும், அதிா்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அவா்களது அச்சத்தைப் போக்கி இயல்புநிலை திரும்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

பாதிக்கப்பட்ட மீனவா்களுக்கு உயா் சிகிச்சை அளித்து, அவா்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் ஜி.கே.வாசன்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT