தமிழ்நாடு

நெல்லை -சென்னை வந்தே பாரத் ரயில் சேவை: ஆளுநர் தமிழிசை, எல் முருகன் பயணம்

24th Sep 2023 01:31 PM

ADVERTISEMENT


திருநெல்வேலி: திருநெல்வேலி- சென்னை இடையிலான வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் ஞானதிரவியம், திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன், பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் அப்துல் வகாப், மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் டிபிஎம் மைதீன் கான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க | நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் சேவை: பிரதமா் மோடி தொடங்கி வைத்தார்

திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட இந்த ரயிலில் தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மதுரை வரை பயணிக்கிறார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT