மேட்டூர் அணையின் நீர்மட்டம் 37.92 அடியிலிருந்து 37.57அடியாக சரிந்தது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த லேசான மழை தனிந்ததன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,639 கன அடியாக குறைந்தது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 37.92 அடியிலிருந்து 37.57அடியாக சரிந்தது.
இதையும் படிக்க | காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மகளிா் இடஒதுக்கீடு மசோதாவில் திருத்தம்:காா்கே
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5,056 கன அடியிலிருந்து வினாடிக்கு 4,639 கன அடியாக குறைந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 10.87 டிஎம்சியாக உள்ளது.
மழை அளவு 32.40 மி.மீட்டராக பதிவாகியுள்ளது.