தமிழ்நாடு

புரட்டாசி சனிக்கிழமை: ஸ்ரீரங்கத்தில் குவிந்த பக்தர்கள்; தரிசன நேரம் அறிவிப்பு

23rd Sep 2023 04:01 PM

ADVERTISEMENT

 

புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் தமிழகம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தமாதமாகும், இம்மாதத்தில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமைகளில் விரதமிருந்து நம்பெருமாளை வழிபாடு செய்தால் நற்பலன்கள் கிட்டும் என்பது ஐதீகம்.
இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி புரட்டாசி மாதம் தொடங்கிய நிலையில் இன்று முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் கூட்டம் அலைமோதியது.

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும் 108 வைணவ திருத்தலங்கள் முதன்மையானதாக விளங்கும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் காலை முதலே திருச்சி மற்றும் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இலவச தரிசனம் மற்றும் 100 ரூபாய் கட்டணம் தரிசனம் மூலம் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர்.

ADVERTISEMENT

புரட்டாசி சனிக்கிழமை நாட்களில் மட்டும் பெருமாளை தரிசனம் செய்வதற்கான நேரங்கள் திருக்கோவில் சார்பில்  ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது அதன்படி...

மூலவர் பெரிய பெருமாளை காலை 6.30 மணி முதல் மதியம் 12.30மணி வரையிலும்...

மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும்...

மீண்டும் 6:30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது...

அதேபோன்று திருக்கோவிலில் இருக்கும் மூலவர் பெரிய பெருமாள் சன்னதி, தாயார் சன்னதி, சக்கராத்தாழ்வார் சன்னதி இராமானுஜர் சன்னதியில் நெய் விளக்கு இட்டும் மற்றும் அணையா விளக்கில் தாங்கள் கொண்டு வந்திருந்த நெய்யை ஊற்றியும் வழிபாடு செய்து வருகின்றனர்.

வரிசையில் இருக்கும் பக்தர்கள் வசதிக்காக இருக்கைகள் அமைக்கப்பட்டு மூலஸ்தானத்திற்கு வெளியே மைசூர் பாக்கு அல்லது லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.

பக்தர்களின் வருகையையொட்டி கூட்ட நெரிசல் இன்றி வழிபாடு செய்வதற்காக திருக்கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.. மேலும் பாதுகாப்பு பணியில் காவல்துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT