மேட்டூர் அணையின் நீர்மட்டம் 38.19 அடியிலிருந்து 37.92 அடியாக சரிந்தது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் லேசான மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5,056 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | சமூக வலைதளம், ஓடிடி-க்கு அடிமையாகும் குழந்தைகள்
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,421 கன அடியிலிருந்து வினாடிக்கு 5,056 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 11.04 டிஎம்சியாக உள்ளது.