தமிழ்நாடு

12 ராசிக்கான வாரப் பலன்கள்!

22nd Sep 2023 04:35 PM

ADVERTISEMENT

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (செப்டம்பர் 22 - 28 ) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

வருமானம் அதிகரிக்கும். தன்னம்பிக்கையும் தனித்திறனும் சிறக்கும். எதிர்ப்புகளை மீறி ஏற்றம் பெறுவீர்கள்.  உடன்பிறந்தோருக்கும் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் மதிக்கப்படுவார்கள். வியாபாரிகள் தனித்து செய்யும் காரியங்களால் வெற்றி காண்பார்கள். விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்குவீர்கள். அரசியல்வாதிகள் துரிதமாகச் செயல்படுவீர்கள்.

ADVERTISEMENT

கலைத் துறையினருக்கு ஒப்பந்தங்கள் கிடைக்கத் தாமதமாகும். பெண்கள் பேச்சில் நிதானமும், கண்ணியமும் தென்படும். மாணவர்கள் யோகா கற்பார்கள்.

சந்திராஷ்டமம் - செப். 22.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

பிறருக்கு  உதவிகளைச் செய்வீர்கள். சிறு தொழில் தொடங்குவீர்கள். பெரியோரின் அன்பும் ஆசியும் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயர் எடுப்பார்கள். வியாபாரிகள் வியாபாரத்தைத் திட்டமிட்டு நடத்துவீர்கள்.  விவசாயிகள் பயிர் விளைச்சலில் ஈடுபடுவீர்கள். 

அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகளிடம் இணக்கமாக இருப்பார்கள். கலைத்துறையினர்  இடையூறை சமாளிப்பீர்கள்.  பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பார்கள்.  மாணவர்கள் நண்பர்களிடம் உதவிகளைப் பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - செப். 23, 24.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

கடன் கொடுக்கும்போது கவனம் தேவை. தொழிலை புதிய இடத்துக்கு மாற்றுவீர்கள்.  அவசியமில்லாத பயணங்களில் ஈடுபட வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடி சிறிது கூடும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள்.  

விவசாயிகள் விளைச்சலைப் பெருக்குவீர்கள்.  அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த விஷயங்களில் வெற்றிகள் குவியும். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்கள் உறவினர்களிடம் அன்பு காட்டுவீர்கள். மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில் வெற்றி பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - செப். 25, 26.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

உங்களின் சிந்தனைகள் தெளிவாகும். பணம் பலவழிகளில் வரும். நண்பர்களைத் தேர்ந்தெடுத்துப் பழகுவீர்கள்.  நீண்ட நாள் ஆசையும் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வும், போனஸýம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல வருவாய் உண்டு. விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கும்.  

அரசியல்வாதிகள் வாக்கு சாதுர்யத்தில் பிறரைக் கவருவீர்கள்.   கலைத் துறையினர் நலிந்தோருக்கு உதவுவீர்கள்.  பெண்களின் இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் அதிகரிக்கும். மாணவர்கள் பிறரிடம் ஒற்றுமையைக் கடைப்பிடிப்பார்கள்.

சந்திராஷ்டமம் - செப். 27, 28.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.  பொருளாதார உதவிகள் கிடைக்கும். பெரியோரின் சந்திப்பால் மகிழ்ச்சி கூடும். அரசு அலுவலர்களிடம் நல்ல உறவை தொடர்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் பாராட்டுகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு இயந்திரப் பணிகள் லாபம் தரும். விவசாயிகளுக்கு மகசூல் லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் நிதானத்துடன் செயல்படவும்.

கலைத்துறையினரின் புத்திசாலித்தனம் பளிச்சிடும். பெண்கள்  திறமையாக நடந்துகொள்வார்கள். மாணவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் காண வழிபிறக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பக்தியும் தர்மச் சிந்தனையும் மேலோங்கும். சேவை செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.  குடும்பத்தைவிட்டுப் பிரிந்தவர்கள் மீண்டும் இணைவார்கள்.  குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் நன்மதிப்பைப் பெறுவார்கள். 

வியாபாரிகள் போட்டிகளைச் சமாளிப்பார்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை ஏற்று நடத்துவார்கள். அரசியல்வாதிகள் சச்சரவுகளைத் தவிர்ப்பார்கள். கலைத்துறையினரின் பொருளாதார நிலை சிறக்கும். பெண்களுக்கு புதிய சொத்துகள் வாங்கும் எண்ணம் மேலோங்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வீர்கள்.  புதிய முயற்சிகளைச் செயல்படுத்துவீர்கள்.  உடனிருப்போர் நல்ல ஆதரவை அளிப்பார்கள்.  உத்தியோகஸ்தர்களின் திறமைக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். வியாபாரிகள் எச்சரிக்கையுடன் இருக்கவும். விவசாயிகள் கால்நடைகளை நன்கு பராமரிப்பார்கள்.  

அரசியல்வாதிகள் மேலிடத்திடம் நல்ல மதிப்பைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பெண்கள் உடனிருப்போர் நலனில் அக்கறை செலுத்துவார்கள். மாணவர்கள் எதிர்பார்த்த படிப்புகளில் சேர்வார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

நினைத்த காரியம் ஈடேறி மகிழ்ச்சி அடைவீர்கள்.  பெரியோர்களின் ஆசியைப் பெறுவீர்கள். பிள்ளைகளின் நடத்தையால் மனம் குளிரும்.  உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் சற்று கவனத்துடன் இருக்கவும்.  வியாபாரிகள் எச்சரிக்கையுடன் இருப்பார்கள்.  விவசாயிகள் வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வார்கள். 

அரசியல்வாதிகளுக்கு உயர்பதவி கிடைக்கும். கலைத்துறையினருக்கு பெயரும் புகழும் உயரும். பெண்கள் கணவரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள். மாணவர்களுக்கு பிறரின் ஆதரவு கிடைக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

தேவைக்கேற்ப வரவுகள் உண்டாகும்.  வெளியூர் பயணங்களில் புதுஅனுபவம் ஏற்படும். கடன் குறையும்.  யோகா கற்பீர்கள்.  உத்தியோகஸ்தர்களுக்கு சில கஷ்டங்கள் ஏற்படும். வியாபாரிகள் புதிய ஆர்டர்கள் பெறுவதில் வெற்றி பெறுவீர்கள். விவசாயிகள் விளைச்சலைப் பெருக்குவீர்கள். அரசியல்வாதிகள் பிறரிடம் கட்சி ரகசியங்களைப் பகிர வேண்டாம். கலைத் துறையினர் தங்களது காரியத்தை நிறைவேற்ற பல தடைகளைக் கடக்க நேரிடும். பெண்கள் விட்டுக் கொடுத்து பழகவும். மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)


வங்கிக் கடன் பெற்று தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.  பெற்றோருடன் இணக்கமாகப் பழகுவீர்கள்.  பூர்வீகச் சொத்தில் வில்லங்கத்தைத் தீர்ப்பீர்கள்.  சிலர் வசிக்கும் வீட்டை பழுது பார்ப்பீர்கள்.  உத்தியோகஸ்தர்களுக்குத் திறமை அதிகரித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளை நன்றாகப் புரிந்துகொள்வார்கள். விவசாயிகள் குத்தகை பாக்கிகளை வசூலிப்பீர்கள்.  கலைத் துறையினர் பிறரின் ஆதரவைப் பெறுவீர்கள். பெண்கள்  பிறருக்கு உதவி செய்து நல்ல மதிப்பைப் பெறுவீர்கள். மாணவர்கள் பெற்றோரை புரிந்துகொள்வார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள்.  கொடுத்த வாக்கை காப்பாற்றி  பிறரை வசப்படுத்துவீர்கள்.  தொழிலில் அபரிதமான வளர்ச்சி 
அடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். வியாபாரிகள் மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

விவசாயிகள் நஷ்டம் ஏற்பட்டாலும் சமாளிப்பீர்கள்.  அரசியல்வாதிகளின் காரியங்கள் நிறைவேறும்.  கலைத் துறையினர் புதிய திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பெண்கள் தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். மாணவர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

நண்பர்களால் உதவிகள் கிடைக்கும்.  உறவினர்களால் நன்மை உண்டாகும். தெய்வ வழிபாட்டை கூட்டிக் கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பயணங்களை மேற்கொள்ள வாய்ப்பு உண்டாகும். வியாபாரிகளின் முயற்சிகள் வெற்றி பெறும். விவசாயிகள் மாற்றுப் பயிர்களைப் பயிரிடும்போது நிதானம் தேவை.

அரசியல்வாதிகளுக்கு எதிர்காலம் சார்ந்த திட்டங்களில் திருப்பம் ஏற்படும். கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மாணவர்கள் வெற்றிப் பாதையில் பயணிப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT