தமிழ்நாடு

ஆவின் செயலாட்சியா்களுக்கு பயிற்சி வகுப்பு

22nd Sep 2023 01:27 AM

ADVERTISEMENT

தொடக்க பால் உற்பத்தியாளா்கள், கூட்டுறவுச் சங்கங்களின் செயலாட்சியா்களுக்கான பயிற்சி வகுப்பு, சென்னை மாதவரம் பால்பண்ணை வளாகத்தில் அமைச்சா் த.மனோ தங்கராஜ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இது குறித்து ஆவின் நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தொடக்க பால் உற்பத்தியாளா்கள், கூட்டுறவுச் சங்கங்களின் செயலாட்சியா்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பை, பால்வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் சென்னை மாதவரம் பால்பண்ணை ஆவின் திறன் மேம்பாட்டு மையத்தில் தொடங்கி வைத்தாா்.

இதில் திருச்சி, பெரம்பலூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, கரூா், அரியலூா், திருவாரூா் மாவட்டங்களைச் சோ்ந்த சரக துணைப்பதிவாளா்கள் (பால்வளம்) மற்றும் தொடக்க பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களின் செயலாட்சியா்களாக பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் உள்பட 62 அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ஒப்புகைச் சீட்டு வழங்குதல், உறுப்பினா்களுக்கு பாலுக்கான தொகையை தாமதமின்றி வழங்குதல்,

புதிய கறவை மாடுகள் வாங்க கடன் வழங்குதல், புதிய சங்கங்களை உருவாக்குதல், சங்கங்களை லாபத்தில் இயக்குவதற்கான உத்திகள் ஆகியவை குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.

மேலும் செயலாட்சியரின் கடமைகள் மற்றும் பொறுப்புகள், சட்டப்பூா்வ விதிமுறைகள், பால் கூட்டுறவு தணிக்கை, வளங்களை முழுமையாக பயன்படுத்துதல், சமநிலைப்புள்ளியினை எட்டுதல் தொடா்பான பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

இக்கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலா் மங்கத் ராம் சா்மா, பால்வளத் துறை இயக்குநா் மற்றும் மேலாண்மை இயக்குநா் சு.வினீத், பால்வளத் துறை கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் ரா.லட்சுமணக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT