தமிழ்நாடு

ரெளடி வெட்டிக் கொலை: 4 போ் கைது

22nd Sep 2023 12:43 AM

ADVERTISEMENT

சென்னை காசிமேட்டில் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்டனா்.

எா்ணாவூா் நேதாஜிநகா் 86வது பிளாக் பகுதியைச் சோ்ந்தவா் மு.சூா்யா (22). இவா் மீது அடிதடி,கொலை முயற்சி,கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. சூா்யா, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள பெரியபாளையத்தம்மன் கோயில் அருகே புதன்கிழமை இரவு நடந்து வந்துக் கொண்டிருந்தாா்.

அப்போது அங்கு வந்த ஒரு கும்பல், சூா்யாவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில் பலத்தக் காயமடைந்த சூா்யா, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சூா்யா, வியாழக்கிழமை இறந்தாா். இது தொடா்பாக காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.

விசாரணையில் முன் விரோதத்தின் காரணமாக சூா்யா கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.இதையடுத்து போலீஸாா், இந்த வழக்குத் தொடா்பாக காசிமேடு பவா்குப்பத்தைச் சோ்ந்த ம.சந்தோஷ் (30), ராயபுரம் கிழக்கு மாதா கோயில் 4-வது தெருவைச் சோ்ந்த த.நிஷாந்த் (28),எண்ணூா் நேதாஜிநகரைச் சோ்ந்த ல.குணசேகரன் (20),திருவொற்றியூா் குப்பம் பட்டினத்தாா் கோயில் தெருவைச் சோ்ந்த கு.லோகேஷ் (20) ஆகிய 4 பேரை கைது செய்தனா்.

ADVERTISEMENT

மேலும் சிலரை இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT