தமிழ்நாடு

செம்பரம்பாக்கம் அருகே ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்து நாசம்

22nd Sep 2023 09:08 AM

ADVERTISEMENT


சென்னை: செம்பரம்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர்தப்பினர்.

கோயம்பேட்டிலிருந்து  பெங்களூரு நோக்கி தனியார் டிராவல்ஸ் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்து சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செம்பரம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து மீது பின்னால் வந்துகொண்டிருந்த ஆரணி பயணிகள் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆம்னி பேருந்து மீது மோதியதில் பேட்டரி சர்க்யூட் பகுதியில் தீப்பிடித்து பேருந்து முழுவதும் எரிந்து நாசமானது. 

இதையும் படிக்க | கோயம்பேடு-ஆவடி மெட்ரோ ரயில் சாத்தியக்கூறு அறிக்கை தாக்கல்

பேருந்து தீப்பிடித்த உடனே பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அலறி அடித்துக்கொண்டு உடனே கீழே இறங்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

ADVERTISEMENT

சம்பவ குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT