தமிழ்நாடு

மகளிர் உரிமைத் தொகை: புதிதாக விண்ணப்பிக்கலாம்!

22nd Sep 2023 01:09 PM

ADVERTISEMENT

 

மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

மகளிர் உரிமைத் தொகை  விண்ணப்பிக்க தவறியவர்கள் தகுதி இருந்தால் மீண்டும் விண்ணப்பிக்கலாம். 

உரிமைத் திட்டத்தில் ஏற்கனவே விண்ணப்பித்து, உரிமைத் தொகை கிடைக்காமல் நிராகரிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி புதியவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. 

ADVERTISEMENT

படிக்க: நாடு தழுவிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: ராகுல் 

மகளிர் உரிமைத் தொகை பெற வரும் அக்டோபர் 18-ம் தேதிக்குள் அந்தந்தப் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் உள்ள அதிகாரிகளிடம் மனு அளிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

கலைஞா் மகளிா் உரிமைத் தொகைத் திட்டம் தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது. 1.06 கோடி மகளிா் தகுதியானவா்களாக அடையாளம் காணப்பட்டனா். 57 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம், கைப்பேசிக்கு குறுஞ்செய்தியாக வரும் என அறிவிக்கப்பட்டது.

நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கு செப். 18 முதல் குறுஞ்செய்தி வரும் என அறிவிக்கப்பட்டாலும், பலரின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், விண்ணப்பதாரா்கள் பலா் பதற்றமடைந்து மாவட்டங்களில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களிலும், சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் குவியத் தொடங்கினர்.

அங்கு அமைக்கப்பட்ட உதவி மையங்களில் விண்ணப்பத்தின் நிலை அறிந்து விண்ணப்பதாரா்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இதில் அவ்வப்போது சா்வா் பிரச்னை எழுவதால், அனைவருக்கும் விண்ணப்ப நிலையை அறிந்து கூற முடியாத நிலை ஏற்பட்டது.

இ-சேவை மையங்கள்

விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவா்கள், இணைய சேவை மையங்களை அணுகி மேல்முறையீடு செய்ய வழி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கைப்பேசி குறுஞ்செய்தி பெறப்பட்ட 30 நாள்களுக்குள் இணைய சேவை மையங்களின் வழியே மேல்முறையீடு செய்யலாம் எனக் கூறப்பட்டது. ஆனால், இணைய சேவை மையங்களில் அதுபோன்ற வசதி இன்னும் ஏற்படுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வரப்பெற்றவா்கள், இணைய சேவை மையங்களை நாடினாலும் மேல்முறையீடு செய்ய முடியாத நிலை இருந்தது.

விண்ணப்பங்களின் நிலையை அறிய வட்டாட்சியா் அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்களில் மகளிா் குவிந்தனர். விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவா்களோ மேல்முறையீடு செய்வது எங்கே எனத் தெரியாமல் தவித்தார்கள். இந்த நிலையில்தான், புதியவர்களும் விண்ணப்பிக்கலாம், மேல்முறையீடும் செய்யலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT