காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் லேசான மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,421 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 38.57அடியிலிருந்து 38.19 அடியாக சரிந்துள்ளது.
இதையும் படிக்க | புறா எச்சத்தால் நுரையீரல் செயலிழப்பு: குஜராத் பெண்ணுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,367 கன அடியிலிருந்து வினாடிக்கு 4,421கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 11.17 டிஎம்சியாக உள்ளது.
மேட்டூரில் மழை அளவு 47.80 மி.மீட்டராக பதிவாகி உள்ளது.