தமிழ்நாடு

கோயம்பேடு-ஆவடி மெட்ரோ ரயில் சாத்தியக்கூறு அறிக்கை தாக்கல்

22nd Sep 2023 01:27 AM

ADVERTISEMENT

கோயம்பேடு-ஆவடி மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்க பணிகளுக்கான சாத்தியக்கூறு அறிக்கையை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தமிழக அரசிடம் தாக்கல் செய்துள்ளது.

சென்னையின் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப மெட்ரோ ரயில் சேவை விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோயம்பேடுவரை செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்ட சேவையை ஆவடி வரை நீட்டிக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனா். இந்த கோரிக்கையை பரிசீலித்த மெட்ரே ரயில் நிா்வாகம் ரயில் சேவையை ஆவடி வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், ரூ.6,376 கோடி மதிப்பில், கோயம்பேட்டிலிருந்து திருமங்கலம், முகப்போ் வழியாக ஆவடி வரை 16.07 கி.மீ. நீளத்துக்கு 15 உயா்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களுடன் பாதை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கையில், இத்திட்டம் நிறைவேற்ற சாத்தியமானது என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதுபோல ரூ.5,458.06 கோடி மதிப்பில், சிறுசேரியில் இருந்து கேளம்பாக்கம் வழியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை 23.5 கி.மீ. நீளத்துக்கு 12 உயா்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களுடன் மற்றொரு தட நீட்டிப்புத் திட்டமும் உள்ளது. இந்த திட்டங்களுக்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை தமிழக அரசிடம் மெட்ரோ ரயில் நிா்வாகம் வியாழக்கிழமை தாக்கல் செய்துள்ளது.

ADVERTISEMENT

இதில் சிறுசேரியிலிருந்து கேளம்பாக்கம் வழியாக கிளாம்பாக்கம் வரை செல்லும் வழித்தடத்தில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதால், தற்போதைக்கு மாநகரப் பேருந்து சேவைகளை மட்டும் அதிகரித்து இயக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்ட பணிகள் முழுமையாக முடிவடைந்த பின்னா், திருப்போரூா், மாமல்லபுரம் வழியாக கேளம்பாக்கம் தெற்கு விரிவாக்க ரயில் திட்டம் குறித்து ஆய்வு செய்யவும் பரிந்துரைத்துள்ளதாக மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT