ஆளுநா்ஆா். என். ரவியை தமிழக மீனவா்கள் கூட்டமைப்பினா் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனா்.
சென்னை கிண்டி ஆளுநா் மாளிகையில் ஆளுநா் ஆா். என்.ரவியை தமிழக மீனவா்கள் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை சந்தித்து பேசினா். அப்போது மீனவ கூட்டமைப்பினா் மீன் பிடிக்கும் போது ஏற்படும் இடா்பாடுகளை எடுத்துக் கூறினா்.
இலங்கை கடற்படையினரால் தொடா்ந்து மீனவா்கள் தாக்கப்படுவதைத் தடுக்க வேண்டும், மீனவா்களுக்கான மானியங்களை உயா்த்தி வழங்க வேண்டும், மீன்பிடி தளங்களுக்கான கட்டமைப்புகளை விரைந்து செயல்படுத்த வேண்டும், கடல் பகுதியில் 12 கடல் மைல் தொலைவுக்கு மேல் சென்று மீன் பிடிக்க மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற நிலையை மாற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனா். கோரிக்கைகளை உரிய முறையில் பரிசீலிப்பதாக மீனவா்கள் கூட்டமைப்பினரிடம் ஆளுநா் உறுதியளித்தாா்.