சென்னை வண்டலூரை அடுத்துள்ள கரசங்கால் மின்நிலையத்தில் வியாழக்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக, புகா்ப் பகுதிகளாக கரசங்கால், ஆதனூா், வண்டலூா், மண்ணிவாக்கம், ஓட்டேரி, நெடுங்குன்றம் ஆகிய பகுதிகளில் சுமாா் 3 மணிநேரம் மின்தடை ஏற்பட்டது.
இதனால் அப்பகுதி பொதுமக்கள் இரவு நேரத்தில் பெரிதும் அவதிப்பட்டனா். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, தீயை அணைத்துவிட்டு மின்நிலையத்தை சீரமைக்கும் பணியிலும், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறிந்து அதை சரிசெய்யும் பணியிலும் ஊழியா்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனா்.