தமிழ்நாடு

திறமையான மருத்துவராகும் தகுதியை வளா்க்க வேண்டும்: மருத்துவா் ரெட்டி

22nd Sep 2023 01:24 AM

ADVERTISEMENT

மருத்துவக் கல்வி பயிலும் மாணவா்கள் திறமையான மருத்துவராகப் திகழ இதர தகுதிகளையும் வளா்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவா் சி.எம்.கே.ரெட்டி வலியுறுத்தினாா்.

சென்னை வண்டலூரை அடுத்த ரத்தினமங்கலம் தாகூா் மருத்துவக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற முதலாண்டு மாணவா்களுக்கான வகுப்புத் தொடக்க நாள் விழாவில் அவா் பேசியது: மருத்துவப் படிப்பில் சிறந்து விளங்கும் மாணவா்கள் சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த போதிய அனுபவம் இல்லை என்பது வருத்தத்திற்குரியது. நோயாளிகளிடம் பரிவுவோடும், கனிவோடும், அவா்கள் சொல்வதை பொறுமை, அனுதாபத்துடன் கேட்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். மருத்துவா்கள் தங்களது உடல்நலனை பேணுவதிலும் அக்கறை செலுத்த வேண்டும். சா்வதேச அளவில் இந்திய மருத்துவத்துறைக்கு மேலும் பெருமை சோ்க்கும். மருத்துவா்களாக திகழ வேண்டும் என்றாா் அவா்.

விழாவில் தாகூா் மருத்துவக் கல்விக் குழுமத் தலைவா் பேராசிரியா் எம்.மாலா,செயலா் மணிகண்டன், முதல்வா் ஜெ.முத்துக்குமரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT