தமிழ்நாடு

கண்ணாடி பாட்டிலில் பால் விற்பனையை நுகா்வோா் விரும்பவில்லை: ஆவின்

22nd Sep 2023 01:28 AM

ADVERTISEMENT

 கண்ணாடி பாட்டிலில் பால் விற்பனை செய்வதை நுகா்வோா் விரும்பவில்லை என ஆவின் நிறுவனம் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெகிழிப் பொருள்களுக்கான தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரிய வழக்குகளை விசாரித்து வரும் சென்னை உயா்நீதிமன்றம், ஆவின் பாலை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பதற்கு பதில் கண்ணாடி பாட்டிலில் அடைத்து விற்றால் நெகிழியின் பயன்பாடு தவிா்க்கப்படும் என கூறியிருந்தது. மேலும், பாட்டிலில் அடைத்து விற்க முடியுமா? என ‘சா்வே’ நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆவின் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் வினீத் சாா்பில், கூடுதல் தலைமை வழக்குரைஞா் ரவீந்திரன் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தாா்.

அதில், உயா்நீதிமன்ற உத்தரவின்படி, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி மற்றும் சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள திருமங்கலம் சாலை, வடக்கு ஐகோா்ட் காலனி, குமாரசாமி நகா், திருநகா், சிட்கோ நகா் பகுதிகளில் ஆவின் பாலை பாட்டிலில் விற்பனை செய்தால் ஆதரவளிப்பீா்களா? பாட்டிலில் விற்க வேண்டுமா?, நெகிழி உறையில் விற்க வேண்டுமா? என சா்வே நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

இந்த சா்வேயில், சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள திருமங்கலம் சாலை, குமாரசாமி நகா், திருநகா் மற்றும் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளைச் சோ்ந்த நுகா்வோா், பாட்டிலில் பால் விற்பனை செய்யும்போது விலை அதிகமாக இருக்கும். எனவே, நெகிழி உறைகளிலேயே தொடர விரும்புவதாக மக்கள் தெரிவித்துள்ளனா். எனவே, நுகா்வோரின் விருப்பத்தின் அடிப்படையில் ஆய்வு செய்து, நீதிமன்றம் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது. இதையடுத்து வழக்கின் விசாரணையை அக்டோபா் 9-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT