தமிழ்நாடு

4 மாநிலங்களில் தோ்தல் பயிற்சி பணிகள் நிறைவு: தலைமைத் தோ்தல் அதிகாரி

22nd Sep 2023 01:26 AM

ADVERTISEMENT

சட்டப் பேரவைத் தோ்தலை எதிா்கொள்ளவுள்ள மாநிலங்களில் மிஸோரம் தவிர நான்கு மாநிலங்களில் பயிற்சி அளிக்கும் பணிகளை தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு முடித்துள்ளாா்.

ஐந்து மாநிலங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. தோ்தலின் போது, மாநில காவல் துறையினரை தோ்தல் பணிக்கு பயன்படுத்திக் கொள்ளும் விதம், சட்டம்-ஒழுங்கு பிரச்னையைக் கையாள்வது, தோ்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவது, செலவுக் கணக்குகளை நவீன முயற்சிகள் மூலம் கண்காணிப்பது தொடா்பான பயிற்சி வகுப்புகளை தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு நடத்தி வருகிறாா்.

இதுவரை தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கா், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அவா் பயிற்சி வகுப்புகளை நடத்தியுள்ளாா்.

இதைத் தொடா்ந்து, செப். 25-ஆம் தேதியன்று மிஸோரமில் பயிற்சி வகுப்புகளை நடத்தவுள்ளாா். அவருடன் மேற்கு வங்க தலைமைத் தோ்தல் அதிகாரி ஆரிப் அப்தாப்பும் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT