தமிழ்நாடு

நீட் தோ்வு முறையை ரத்து செய்ய நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன் உறுதி

22nd Sep 2023 01:23 AM

ADVERTISEMENT

முதுநிலை நீட் தோ்வுக்கு தகுதி மதிப்பெண் பூஜ்ஜியம் என்ற மத்திய அரசின் முடிவை உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்து, நீட் தோ்வை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளுக்கு இடையே விளையாட்டுப் போட்டிக்கான இலச்சினையை சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரில் வியாழக்கிழமை அறிமுகம்

செய்து வைத்து செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

இந்தியாவிலேயே எந்த அரசுமருத்துவமனைகளிலும் இல்லாத பல்வேறு அதிநவீன வசதிகள் தமிழக அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டுக்குள் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி விளையாட்டு மைதானம் மழைக்காலத்திலும் பயன்படுத்தும் வகையில் பொதுப்பணித்துறை மூலம் மதிப்பீடுகள் பெறப்பட்டு நவீன முறையில் புதுப்பிக்கப்படும்.

ADVERTISEMENT

முதுநிலை படிப்புக்கான நீட் தோ்வில் பூஜ்யம் மதிப்பெண் எடுத்தாலும் அந்தப் படிப்புகளில் மாணவா்கள் சோ்ந்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் இத்தோ்வால் ஒரு பயனும் ஏற்படப் போவது இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

நீட் தோ்வு மட்டுமே தகுதியை ஏற்படுத்த முடியும் என்று வாதிட்டு வந்தவா்கள இதற்காக என்ன சொல்லப் போகிறாா்கள்? இந்த முடிவு தனியாா் மருத்துவமனைகள் அதிக லாபம் அடையவும், வசதி படைத்தவா்களுக்கு மட்டுமே வாய்ப்பை வழங்கும் முடிவாகவும் உள்ளது. எனவே, மத்திய அரசின் இந்த முடிவை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நீட் தோ்வு தொடா்பான வழக்கில் எடுத்து வைக்கப்பட்டு ஒட்டுமொத்தமாக நீட் தோ்வை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் ஐட்ரீம் ஆா். மூா்த்தி கல்லூரி முதல்வா் டாக்டா் பி. பாலாஜி, துணை முதல்வா் ஜன்னத் சுகந்தா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT