தமிழ்நாடு

அதிமுக - பாஜக இடையே பிரச்னையில்லை: அண்ணாமலை 

21st Sep 2023 02:15 PM

ADVERTISEMENT

அதிமுக மற்றும் பாஜக இடையே பிரச்னை ஏதுமில்லை என்று கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்ததாவது:

எனது அரசியலில் நான் தெளிவாக இருக்கிறேன். தன்மானம் எனக்கு முக்கியம். அதிமுக மற்றும் பாஜக இடையே பிரச்னை ஏதுமில்லை. எனக்கு யாருடன் எந்த பிரச்னையும் இல்லை. யாரையும் நான் தவறாக பேசவில்லை. 

கூட்டணி தொடர்பாக அதிமுக பேசிய கருத்துகளுக்கு நான் பதிலளிக்க முடியாது. பிரதமர் மோடியை ஆதரிப்பவர்களை நானும் ஆதரிப்பேன். இதில் மாற்றுக்கருத்தே இல்லை. 

ADVERTISEMENT

அறிஞர் அண்ணாவை நான் ஒருபோதும் எதிர்த்ததோ, விமரிசித்ததோ இல்லை. எனக்கும் அதிமுக தலைவர்களுக்கும் தனிப்பட்ட எந்த பிரச்னையும் இல்லை. நாளை அதிமுக தலைவர்களை பார்க்கும்போது மரியாதையோடு பழகுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: உட்கார்ரா.. உதை வாங்கப் போற..: மக்களவையில் ஆவேசமான தயாநிதிமாறன்

முன்னதாக அதிமுக கூட்டணியில் தற்போது பாஜக இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த நிலையில், அண்ணாமலை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT