காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பள்ளிகள் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகின்றது. மேலும், நீலகிரி, கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற கேள்வி பெற்றோர்களிடையே எழுந்தது.
ஆனால், பள்ளிகளில் காலாண்டுத் தேர்வு நடைபெறுவதாலும், மிதமான மழையே பெய்து வருவதாலும் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | 9 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.