மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நாளை(வெள்ளிக்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளதையொட்டி கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது கட்சி நிர்வாகிகளுடன் நாளை(வெள்ளிக்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்.
கோவையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க | இதழியலில் செய்யறிவு (ஏஐ) தொழில்நுட்பம்: ஆபத்தா, வாய்ப்பா?