தமிழ்நாடு

தூத்துக்குடியில் கொலை வழக்கில் தொடர்புடைய தலைமை காவலர் பணிநீக்கம்: எஸ்பி உத்தரவு

21st Sep 2023 04:26 PM

ADVERTISEMENT

தூத்துக்குடி: கொலை வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி மத்திய பாகம் தலைமை காவலரை பணிநீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

இது குறித்து மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் பொன்மாரியப்பன். இவர் கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் தேதி மத்திய பாகம் காவல் நிலையத்தில் உடல்நிலை சரியில்லை என விடுப்பு எடுத்துச் சென்றாராம். 

இந்நிலையில், அதே நாள் இரவு தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவருடன் சேர்ந்து, தூத்துக்குடி பாத்திமா நகரை சேர்ந்த லூர்து ஜெயசீலன் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ADVERTISEMENT

இதையடுத்து, பொன்மாரியப்பன் மீது துறை ரீதியாக நடைபெற்ற விசாரணையில், குற்றம் நிரூபணம் ஆனது. எனவே, ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்த காவல்துறையின் கட்டுக் கோப்பை சீர்குலைத்து பொதுமக்களின் மத்தியில் காவல்துறையின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் குற்றசெயல் புரிந்த தலைமை காவலர் பொன்மாரியப்பனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் பணியில் இருந்து பணிநீக்கம் (Dismissed from Service)  செய்து உத்தரவிட்டார். 

இதையும் படிக்க: சென்னையில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்கள் அறிவிப்பு!

கொலை வழக்கில் தொடர்புடைய தலைமைக் காவலர் பணியில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் காவல் துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT