தமிழ்நாடு

நாமக்கல்: ஆதிவாசி அமைப்புகளின் தேசிய மாநாடு தொடக்கம்

19th Sep 2023 01:02 PM

ADVERTISEMENT

நாமக்கல்: நாமக்கல்லில்,  ஆதிவாசிகள் அமைப்புகளின்,  நான்காவது தேசிய அளவிலான மாநாடு  செவ்வாய்க்கிழமை(செப்.19) தொடங்கியது.

நாமக்கல்-பரமத்திவேலூர் சாலையில் உள்ள  கொங்கு திருமண மண்டபத்தில் செவ்வாய் முதல் வியாழன் வரை  மூன்று நாள்கள் இம் மாநாடு நடைபெறுகிறது.
செவ்வாய்க்கிழமை அன்று தியாகிகளின் நினைவு சுடர் பெறும் நிகழ்வும், மாநாடு கொடியேற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

அகில இந்திய ஆதிவாசிகள் அமைப்பின் தலைவர் டாக்டர் எம்.பாபுராவ் கொடியேற்றி தொடக்கிவைத்தார். துணைத் தலைவர் திருப்பதிராவ் இரங்கல் தீர்மானம் வாசித்தார்.   

ADVERTISEMENT

மாநாட்டு வரவேற்புக் குழு தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான பி. டெல்லிபாபு  வரவேற்று பேசினார். கேரள மாநில தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

நாளை (புதன்கிழமை) ஆண்டறிக்கையை அகில இந்திய அமைப்பாளர் ஜிஜேந்திர சௌத்ரி  வாசிக்கிறார். மாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், அகில இந்திய துணைத் தலைவர் பிருந்தாகாரத் சிறப்புரையாற்றுகிறார். வியாழக்கிழமை அன்று மாலை 4 மணி அளவில் அகில இந்திய பழங்குடி மக்களின் பண்பாட்டு பேரணியை  ஏ.ரங்கசாமி தொடங்கி வைக்கிறார். மாலை 5 மணி அளவில் பொதுக்கூட்டம்  மத்திய குழு உறுப்பினர் பெ. சண்முகம்  தலைமையில்நடைபெறுகிறது.

இதில், அகில இந்திய துணைத் தலைவர் பிருந்தாகாரத் சிறப்புரையாற்றுகிறார். மேலும், தேசிய, மாநில மாவட்ட அளவிலான நிர்வாகிகள் உரையாற்றுகின்றனர். நிறைவில், மாநாட்டு வரவேற்பு குழு பொருளாளர் ஏ.டி. கண்ணன் நன்றி தெரிவிக்கிறார். 

இதையும் படிக்க: ம.பி.: பழங்குடியினர் விடுதியில் இரவு உணவு சாப்பிட்ட 80 மாணவர்கள் பாதிப்பு!

இந்த மாநாட்டில் 18 மாநிலங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஆதிவாசி அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழகத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் கலந்து கொள்கின்றனர். நாடு முழுவதும் உள்ள 10 கோடி ஆதிவாசி மக்களின் நலன்களை காக்கும் பொருட்டு இந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT