தமிழ்நாடு

இரு சக்கர வாகனத்தில் சாகசம்: டிடிஎஃப் வாசன் மீது வழக்குப் பதிவு!

18th Sep 2023 09:17 AM

ADVERTISEMENT


இருசக்கர வாகன பயணத்தின் சாகசம் செய்ய முயன்றபோது விபத்துக்குள்ளான டிடிஎஃப் வாசன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

டிடிஎஃப் வாசன் என்பவர் இருசக்கர வாகன பயணத்தின் மூலம் யூடியூப்பில் பிரபலமானவராக அறியப்படுகிறார். யூடியூப்பில் தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள இவர் அடிக்கடி அதிவேகமாக பயணம் செய்து சாகசங்களை மேற்கொண்டு வருவார்.

இந்தநிலையில், காஞ்சிபுரத்திற்கு அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகன பயணத்தின்போது முன் சக்கரத்தைத் தூக்கி சாகசம் முயன்றுள்ளார்.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் 2 முறை தலைகீழாக சுழன்று சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், டிடிஎஃப் வாசன் கையில் படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | விருத்தாசலம் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 பேர் காயம்

இந்த நிலையில், டிடிஎஃப் வாசன் மீது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியது, கவனக்குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பாலுசெட்டி சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

டிடிஎஃப் வாசன் மஞ்சள் வீரன் என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT