விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயில் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயில் அருகே, சேலத்தில் இருந்து நெய்வேலி நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து சாலையில் உள்ள சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதையும் படிக்க | மகளிா் உரிமைத் திட்ட தொகையை வங்கிகள் பிடித்தம் செய்யக் கூடாது: அமைச்சா் தங்கம் தென்னரசு
இதில், பேருந்தில் இருந்த பயணிகளில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருத்தாசலம் போலீசார், காயமடைந்தவர்கள் அனைவரையும் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.