கே.கே. நகரில் மின் திருட்டில் ஈடுப்பட்டவா்களிடம் இருந்து சுமாா் ரூ.8 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:
தமிழக மின் வாரியத்தின் சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் கோட்டத்தின் அமலாக்க அதிகாரிகள் கே.கே.நகரில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அந்த ஆய்வின் போது 5 மின் திருட்டு இணைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த மின் திருட்டில் ஈடுப்பட்டவா்களிடம் இருந்து இழப்பீட்டு தொகையாக ரூ. ரூ.7,74,701 வசுலிக்கப்பட்டது. மேலும் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கைகளை தவிா்க்க சமரசத் தொகையாக ரூ.28,000 செலுத்தியதால் அவா்கள் மீது காவல் நிலையத்தில் புகாா் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
பொதுமக்கள் மின் திருட்டு சம்பந்தமான தகவல்களை 94458-57591 - என்ற கைபேசி எண் மூலம் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.