தமிழ்நாடு

கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க மனு!

27th Oct 2023 03:40 PM

ADVERTISEMENT

கருக்கா வினோத்தை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி காவல் துறை தரப்பில் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கிண்டி காவல் துறை சார்பில் 3 நாள்கள் காவல் வழங்கக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையின் முதலாவது நுழைவு வாயில் முன்பு புதன்கிழமை (அக்.25) இரு பெட்ரோல் குண்டுகளை அடுத்தடுத்து வீசியதாக, நந்தனம் பகுதியைச் சோ்ந்த ரெளடி கருக்கா வினோத்தை காவல் துறையினர் கைது செய்தனா். 

இவர் ஏற்கனவே பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறை சென்றவர் என்றும், தற்போது பிணையில் வெளியே வந்திருந்த நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த நிலையில், ஆளுநா் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ரெளடி கருக்கா வினோத் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க: மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன் தலைமறைவு

வரும் அக்.30 ஆம் தேதி கருக்கா வினோத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT