தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.
அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிா்ச்சியளிக்கிறது. அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு தற்போது எத்தகைய நிலையில் உள்ளது என்பதற்கு, இந்த சம்பவம் உதாரணம்.
தமிழக அரசு உடனடியாக சட்டம்- ஒழுங்கில் கவனம் செலுத்தி, வெடிகுண்டு கலாசாரம் பரவுவதை தடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு துணை போகாமல், கடுமையான தண்டனை வழங்கினால்தான், இது போன்ற குற்றங்கள் நிகழாமல் தடுக்க முடியும் என்று கூறியுள்ளாா் விஜயகாந்த்.