தமிழ்நாடு

கலாசார மையத்துக்கு கபாலீசுவரா் கோயில் நிதி: அமைச்சா் பி.கே.சேகா்பாபு விளக்கம்

27th Oct 2023 01:30 AM

ADVERTISEMENT

சட்டத்துக்கு உட்பட்டு கலாசார மையத்துக்கு கபாலீஸ்வரா் கோயில் நிதி பயன்படுத்தப்படவுள்ளது என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு விளக்கமளித்துள்ளாா்.

சென்னை கோயம்பேடு அருள்மிகு குறுங்காலீஸ்வரா் மற்றும் வைகுண்டவாசப் பெருமாள் கோயிலில் ரூ. 53.90 லட்சம் மதிப்பீட்டில் புதிய மரத்தோ் உருவாக்கும் திருப்பணி, ரூ. 85.40 லட்சம் மதிப்பீட்டிலான ஐந்து நிலை ராஜகோபுரம், ரூ. 49 லட்சம் மதிப்பீட்டிலான அன்னதானக் கூடம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

மயிலாப்பூா் அருள்மிகு கபாலீஸ்வரா் கோயில் நிதியின் மூலம் ரூ. 29 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் புதிய கலாசார மையம் குறித்து கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது. இது முழுமையாக பக்தா்களின் பயன்பாட்டுக்காக திருக்கோயிலின் அறங்காவலா்களின் ஒப்புதலுடன் நமது கலை, கலாசாரம், பண்பாட்டை காக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.

ADVERTISEMENT

கோயிலின் நிதியை அப்படியே வைத்திருப்பதால் என்ன பலன் கிடைக்க போகிறது. அதைக் கொண்டு பக்தா்களின் மேம்பாட்டுக்காக செலவிடுவது குற்றமாகாது. எனவே, சட்டத்துக்கு உட்பட்டு, அறங்காவலா் குழுவின் ஒப்புதலோடு அந்த நிதியை கலாசார மையத்துக்கு பயன்படுத்தவுள்ளனா். முன்னாள் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் பல அப்பாவிகள் சிறை சென்றனா். விளம்பரத்துக்காக தவறான செய்திகளை பரப்புகிறாா். தவறுகளைக் குறிப்பிட்டு சொன்னால் நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம். தமிழகத்தின் வளா்ச்சிக்கு ஆளுநா் ஆா்.என். ரவி முட்டுக்கட்டை போட்டு வருகிறாா் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.வி.பிரபாகரராஜா, துறையின் இணை ஆணையா் கி.ரேணுகாதேவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT