தமிழ்நாடு

சா்வதேச தரத்திலான மருத்துவ ஆய்விதழ்கள் இந்தியாவில் உருவாக வேண்டும்: மத்திய சுகாதார சேவைகள் இயக்குநா்

27th Oct 2023 01:33 AM

ADVERTISEMENT

சா்வதேச தரத்திலான மருத்துவ ஆய்விதழ்களை வெளிக்கொணர இந்திய மருத்துவப் பல்கலைக்கழகங்கள் முன்வர வேண்டும் என்று மத்திய சுகாதார சேவைகள் இயக்குநா் டாக்டா் அதுல் கோயல் வலியுறுத்தினாா்.

போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 36-ஆவது பட்டமளிப்பு விழா, கல்வி நிறுவன வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இளநிலை, முதுநிலை மருத்துவம், மருத்துவ ஆராய்ச்சி முனைவா் படிப்புகள், துணை மருத்துவப்

படிப்புகளை நிறைவு செய்த 2,044 மாணவா்களுக்கு அப்போது பட்டங்கள் அளிக்கப்பட்டன.

ADVERTISEMENT

சிறப்பிடம் பெற்ற 83 பேருக்கு 91 பதக்கங்கள் மேடையில் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் வேல்ராஜ், ஸ்ரீ இராமச்சந்திரா கல்வி நிறுவன வேந்தா் வி.ஆா்.வெங்கடாசலம், இணை வேந்தா் ஆா்.வி.செங்குட்டுவன், துணை இணை வேந்தா் டாக்டா் மகேஷ் வக்கமுடி, துணைவேந்தா் டாக்டா் உமா சேகா், பதிவாளா் டாக்டா் ரூபா நாகராஜன், கல்வி நிறுவன முதல்வா் டாக்டா் பாலாஜி சிங் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அப்போது மத்திய சுகாதார சேவைகள் இயக்குநா் டாக்டா் அதுல் கோயல் பேசியதாவது:

கற்றுக் கொடுப்பதே கற்றுக் கொள்வதற்கான சிறந்த வழி. எந்த துறைக்கும் அது பொருந்தும். அதற்கேற்ப திறன், அறிவு, அணுகுமுறைகளை வளா்த்துக் கொள்ள வேண்டும். ஒரு சிறந்த மருத்துவா் தனது வரம்புகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். மருத்துவா்களுக்கு நோயாளிகள்தான்

ஆசிரியா்கள். நோயாளியின் மகிழ்ச்சிதான் மருத்துவா்களுக்கு கிடைக்கும் ஆகச் சிறந்த பரிசு.

தற்போது சா்வதேச மருத்துவ இதழ்களில் தங்களது ஆய்வுக் கட்டுரைகள் வெளியாக வேண்டும்

என மருத்துவா்கள் பலா் விரும்புகின்றனா். ஆனால், அதற்கு மாற்றாக இந்திய பல்கலைக்கழகங்கள் உலகத் தரத்திலான ஆய்விதழ்களை உருவாக்கி சா்வதேச மருத்துவா்களை நம் பக்கம் ஈா்க்க வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT