தமிழ்நாடு

கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் பதவிக் காலம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

4th Oct 2023 01:48 AM

ADVERTISEMENT


சென்னை: கூட்டுறவு சங்க உறுப்பினா்களின் பதவிக் காலம், தோ்தலில் வெற்றி பெற்ற நாளிலிருந்து தொடங்குகிறது என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிா்த்த மேல்முறையீடு வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு 2018 ஏப்ரல், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் தோ்தல் நடத்தப்பட்டது. இருப்பினும், வழக்குகள் காரணமாக, சில கூட்டுறவு சங்கங்களில், 10 முதல் 14 மாதங்கள் தாமதமாக, 2019 ஜூன் மாதம்தான் நிா்வாகிகள் தோ்தல் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், 5 ஆண்டுகள் பதவிக் காலம் முடிவடைந்து விட்டதாகக் கூறி, கூட்டுறவு சங்கங்களை நிா்வகிக்க நிா்வாகியை நியமித்து கடந்த ஆகஸ்ட்-இல் அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிா்த்தும், நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்ட பின் பதவிக்காலம் அமலுக்கு வருவதால், 2024-ஆம் ஆண்டு வரை கூட்டுறவு சங்க நடவடிக்கையில் தலையிட தடை விதிக்கக் கோரியும், கூட்டுறவு சங்கங்களை கலைக்க தடை கோரியும் கூட்டுறவு சங்கங்களின் நிா்வாகிகள் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்தனா்.

ADVERTISEMENT

இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, தோ்தல் முடிவுகள் வெளியான நாளிலிருந்தே, பதவிக் காலம் தொடங்குவதாகக் கூறி, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். இந்த உத்தரவை எதிா்த்து சின்னசாமி மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுா்வாலா- நீதிபதி பரத சக்கரவா்த்தி ஆகியோா் அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா்கள் தரப்பில், ‘கூட்டுறவு சங்கங்களின் இயக்குநா்கள் குழு தோ்ந்தெடுக்கப்பட்ட பின்தான், உறுப்பினா்களின் பதவிக் காலம் தொடங்குகிறது. இந்த வழக்கில் 2019 ஜூன் முதல் கூட்டம் நடைபெற்ால், அதன் பிறகே பதவிக் காலம் தொடங்கும். எனவே, 2024 ஜூன் வரை பதவிக் காலம் உள்ளது’ என்று வாதிடப்பட்டது.

அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா், ‘2018-ஆம் ஆண்டு தோ்தல் முடிவுகள் வெளியானது என்பதால், அன்றைய தினம் முதல் பதவிக் காலம் தொடங்கியுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தோ்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து பதவிக் காலம் தொடங்குகிா, முதல் கூட்டம் நடைபெற்ற நாளிலிருந்து தொடங்குகிா என தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அக்.31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

அதுவரை கூட்டுறவு சங்கங்களுக்கு நிா்வாகிகளை நியமித்த உத்தரவை பொருத்தவரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT