தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,514 கன அடி!

4th Oct 2023 08:57 AM

ADVERTISEMENT


மேட்டூர்:  காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,514 கன அடியாக சரிந்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை 35.38 அடியிலிருந்து 34.42 அடியாக சரிந்துள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,560 கன அடியிலிருந்து வினாடிக்கு 1,514 கன அடியாக சரிந்துள்ளது.

இதையும் படிக்க | ஆசிய விளையாட்டுப் போட்டி: ராம், மஞ்சு ராணி இணைக்கு வெண்கலம் 

ADVERTISEMENT

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 9.39 டிஎம்சியாக உள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT