தமிழ்நாடு

கும்பகோணத்தில் 13 பேருக்கு டெங்கு உறுதி

4th Oct 2023 12:41 PM

ADVERTISEMENT


தஞ்சாவூர்: கும்பகோணம் பகுதியில் 13 போ் டெங்கு காய்ச்சால் பாதிக்கப்பட்டிருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பெய்து வரும் மழை காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீா் தேங்கியுள்ளது. இதனால், பொதுமக்களுக்கு ஏற்படும் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் பிரிவு தனியாக தொடங்கவும், அனைத்து புறநோயாளிகள் பிரிவிலும் பொதுமக்களுக்கு தேவையான ஓஆா்எஸ் சத்துநீா் கரைசல் தயாா் நிலையில் வைத்திருக்கவும், 5 நாள்களுக்கு மேல் காய்ச்சல் உள்ளவா்களைக் கண்டறிந்து அவா்களுக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியும் எலிசா பரிசோதனை செய்யவும், குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டால் அவா்கள் பயிலும் பள்ளி, வசிக்கும் பகுதிகளில் தீவிர கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிக்க | மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க தலைமை ஆசிரியர் தலைமையில் நலக்குழு: மத்திய அரசு

ADVERTISEMENT

இந்த நிலையில், டெங்கு பரவாமல் தடுக்க மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊரகப் பகுதிகள் என மாவட்டத்தில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டன.

இந்த நிலையில், கும்பகோணம் பகுதியில் 13 போ் டெங்கு காய்ச்சால் பாதிக்கப்பட்டிருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 13 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT