விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) வீடு திரும்பினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடருக்குப் பின் கட்சிப் பணிகளிலும், தொகுதி நலத் திட்டப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தாா்.
பின்னர், அவருக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் உடல் சோா்வு ஏற்பட்டதையடுத்து சென்னை, வடபழனியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த செப். 24 ஆம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டாா்.
இதையும் படிக்க | அக். 5ல் அண்ணாமலை தலைமையில் பாஜக நிர்வாகிகள் கூட்டம்!
உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல் நிலை தற்போது சீராக இருப்பதாகவும் மருத்துவா்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் காய்ச்சலில் இருந்து அவர் முழுமையாக குணமானதையடுத்து மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பினார்.