தமிழ்நாடு

ஸ்ரீமுஷ்ணம் அருகே பிளஸ் 2 மாணவர் கொலை!

3rd Oct 2023 01:11 PM

ADVERTISEMENT

 

ஸ்ரீமுஷ்ணம் அருகே பிளஸ் 2 மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் மேலபுளியங்குடி கிராமத்தைச் சேர்ந்த வீரமணி மகன் ஜீவா (17). பிளஸ் 2 பயிலும் மாணவர் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு  விருத்தாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்துக் கொண்டிருந்தபோது அதே ஊரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஆனந்த் (27) என்பவர் கத்தியால் குத்திவிட்டுத் தலைமறைவானார். 

படிக்க: கேரளத்தில் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

ADVERTISEMENT

மாணவர் ஜீவாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மாணவரைப் பரிசோதனை செய்த மருத்துவர் இறந்து விட்டதாகத் தெரிவித்தார். இதனையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 
இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT