தமிழ்நாடு

மேட்டூர் அனல் மின் நிலைய  2வது பிரிவு: மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்

3rd Oct 2023 09:39 AM

ADVERTISEMENT

மேட்டூர் அனல் மின் நிலையத்தின் 2-வது பிரிவில் நான்கு நாள்களுக்குப் பிறகு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட நான்கு அலகுகள் மூலம் 840 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகு மூலம் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டு பிரிவுகளிலும் 1440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக கடந்த 29ம் தேதி 600 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டது. தற்போது கொதிகலன் குழாய் வெடிப்பு சரி செய்யப்பட்டது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க: கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

இந்நிலையில், நான்கு நாள்களுக்குப் பிறகு இன்று(அக்.3) காலை முதல் மேட்டூர் அனல் மின் நிலையத்தின் இரண்டாவது பிரிவில்  மீண்டும் மின் உற்பத்தியை தொடங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT