தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1560 கன அடி!

3rd Oct 2023 08:31 AM

ADVERTISEMENT

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1560 கன அடியாக குறைந்துள்ளது.

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 36.31அடியிலிருந்து 35.38அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3122 கன அடியிலிருந்து, வினாடிக்கு 1560 கன அடியாக குறைந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 9.83 டிஎம்சியாக உள்ளது.

இதையும் படிக்க: உக்ரைனுக்கு வீரா்களை அனுப்பும் திட்டமில்லை!

ADVERTISEMENT

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT