அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் பிப்ரவரி 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7.45 மணிக்கு நடைபெற உள்ளது.
கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்ற கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து, அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் குறித்து ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், 2024 தை மாதம் 19ஆம் நாள் பிப்ரவரி 2ஆம்தேதி வெள்ளிக்கிழமை காலை 7.45 முதல் 9 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
படிக்க: கேரளத்தில் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
இக்கூட்டத்தில், கோயில் சிவாச்சாரியார்கள், கோயில் அலுவலர்கள், அறங்காவலர் குழுவினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.