கோவை: கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்எல்ஏக்கள் செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினர்.
பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக அதிமுக தலைமை கடந்த மாதம் அறிவித்தது. மேலும், பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்று அதிமுக நிர்வாகிகள் திட்டவட்டமாக தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், கோவைக்கு பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
பொள்ளாச்சி ஜெயராமன், அமுல் கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர். அப்போது பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் உடனிருந்தார்.
இதையும் படிக்க | அண்ணாமலை இல்லாமல் பாஜக பொறுப்பாளர்கள் கூட்டம்!
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய பிறகு முதல்முறையாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மத்திய அமைச்சரை சந்தித்து பேசிய சம்பவம் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.