தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது!

3rd Oct 2023 08:04 PM

ADVERTISEMENT

 

காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகில் சரக்கு ரயிலில் இருந்து பொருட்களை இறக்குவதற்காக பின்புறமாக வந்து கொண்டிருந்த பொழுது ரயில்வே கேட் அருகில் நிற்காமல் பின்னாடியே  சென்றதால் ரயில் தண்டவாளம் பெயர்ந்தது.

இதனால், ரயில்வே கேட் மூடப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. காஞ்சிபுரம் சிவகாஞ்சி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரயில்வே போலீசாரும் இது குறித்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர். சரக்கு ரயில் தண்டவாளத்தின் மீது ஏறி நின்றதால் உயிர் பலிகள் எதுவும் ஏற்படவில்லை.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT