தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களாகப் பகலில் வெளுத்துவாங்கும் வெயிலும், இரவில் மழையும் பெய்து பூமியைக் குளிர்வித்து வருகின்றது.
இந்த நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கும் மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
படிக்க: அக்டோபர் மாத பலன்கள் (மேஷம் - கன்னி)
இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இன்று அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என்பதால் மழைக்கு வாய்ப்புள்ள இந்த 4 மாவட்டங்களிலிருந்து வெளியே செல்லும் மக்கள் சற்று முன்னெச்சரிக்கையாகக் குடை கொண்டு செல்லவும்.